2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை

மறைந்திருந்து தாக்குதல்: கால்நடை வைத்தியருக்கு காயம்

Kogilavani   / 2015 டிசெம்பர் 10 , மு.ப. 03:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

காஞ்சன குமார ஆரியதாஸ

கால்நடை வைத்தியரான எச்.எம்.ராஜநாயக்க உபவங்ச (வயது 48) என்பவர் மீது இனந்தெரியாத மூவர் நடத்திய தாக்குதலில் அவர், கடும் காயங்களுக்கு உள்ளான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதுதொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

கலேவேல-வெத்யாய பிரதேசத்தில் நோய்வாய்ப்பட்டிருந்த பசுவுக்கு வைத்தியம் பார்த்துவிட்டு வீடு திரும்பிகொண்டிருந்தபோது, கலேவெலவுக்கு உட்பட்ட பகுதியில் மதுபானம் அருந்திய நிலையில் மறைந்திருந்த மூவர், வைத்தியரை தாக்கியுள்ளனர்.

பொலிஸ் பணியிலிருந்து இடைநிறுத்தப்பட்ட ஒருவரும் இராணுவத்திலிருந்து தப்பியோடியதாகக் கூறப்படும் இளைஞரொவரும் மற்றுமொரு நபருமே இத்தாக்குதலை மேற்கொண்டுள்ளதாக தெரியவருகிறது.

தாக்குதல் காரணமாக வைத்தியரின் முகத்தில் 15 தையல்கள் போடப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. இச்சம்பவம் தொடர்பில் கலேவெல பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .