2025 மே 12, திங்கட்கிழமை

மற்றுமொரு விபத்தில் சாரதி படுகாயம்

Editorial   / 2023 ஓகஸ்ட் 02 , பி.ப. 06:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

மொனராகலை – வெல்லவாய வீதியில் மதுருகெட்டிய பிரதேசத்தில் புதன்கிழமை (02) மாலை இடம்பெற்ற விபத்தில் கெப் வண்டியின் சாரதி படுகாயமடைந்துள்ளதாக மொனராகலை பொலிஸார் தெரிவித்தனர்.

மொனராகலையிலிருந்து கதிர்காமம் நோக்கிச் சென்றுகொண்டிருந்த கதிர்காமம் லங்காம டிப்போவுக்குச் சொந்தமான பேருந்தும் ஒக்கம்பிடியிலிருந்து மொனராகலை நோக்கிச் சென்று கொண்டிருந்த கெப் வண்டியும் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

கெப் வண்டியின் சாரதியான டபிள்யூ.ஏ.உதய குமார படுகாயமடைந்து மொனராகலை மாவட்ட பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

உப பொலிஸ் பரிசோதகர் நாமலின் அறிவுறுத்தலின் பேரில் மொனராகலை பொலிஸ் போக்குவரத்து பிரிவு நிலைய பொறுப்பதிகாரி ஜனக ரத்னசிறி விசாரணைகளை மேற்கொண்டு வருகிறார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X