2025 ஓகஸ்ட் 13, புதன்கிழமை

மலைக்குருவி வைத்திருந்தவர் கைது

Thipaan   / 2017 மார்ச் 31 , மு.ப. 05:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

மு.இராமச்சந்திரன்

நாட்டின் அரிய வகைப் பறவை இனங்களில் ஒன்றான மலைக்குருவியை விற்பனைக்காக வைத்திருந்த நபரை, ஹட்டன் டிக்கோயா பிரதேசத்திலுள்ள வீடொன்றில் வைத்துக் கைது செய்துள்ளதாக, ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.

பொலிஸாருக்குக் கிடைத்த இரகசிய தகவலையடுத்து குறித்த வீட்டைச் சுற்றிவளைத்த போது, விற்பனைக்காக மலைக்குருவியை வைத்திருந்த நபர், நேற்று (30) இரவு கைது செய்யப்பட்டார்.

ஹட்டன், சிங்கமலை புகையிரதச் சுரங்கப்பாதையில் வாழ்ந்த மலைக்குருவியினமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது. அண்மைகாலமாக குறித்த பகுதியில் மலைக்குருவியைப் பிடித்தவர்களை பொலிஸார் கைது செய்த நிலையிலே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது

ஐந்து நட்சத்திர ஹேட்டல்களில் மலைக்குருவியின் சூப் செய்யப்பட்டு, வெளிநாட்டு உல்லாசப் பிரயாணிகளுக்கு விற்பனை செய்யப்படுவதால், ஹோட்டல்களுக்கு அதிக விலைக்கு விற்பனை செய்வதற்காகவே இவ்வாறு மலைக்குருவிகள் பிடிக்கப்படுவதாகத் தெரிவித்த பொலிஸார், சந்தேக நபரை ஹட்டன் மாவட்ட நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகத் தெரிவித்தனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .