Sudharshini / 2015 ஒக்டோபர் 08 , பி.ப. 07:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
சாமிவேல் சுதர்ஷினி
'மலையகத்தில் நிலவிவரும் குறைபாடுகள் அனைத்தும், வரவு-செலவு திட்டத்துக்கு பின்னரே நிவர்த்தி செய்யப்படும்' என மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரம் தெரிவித்தார்.
'வரவு- செலவு திட்டம் முன்வைக்கப்பட்ட பின்னர், எனது அமைச்சின் கீழ் அபிவிருத்தி திட்டங்களுக்கான நிதியை ஒதுக்கீடு செய்து , மலையகத்தில் அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுக்க நடவடிக்கை எடுப்பேன்' என்றும் அவர் குறிப்பிட்டார்.
பொகவந்தலாவ, கிலானி தோட்டத்தில் வீதியை புனரமைத்து தருமாறு சடலத்துடன் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டம் தொடர்பில், கேட்டபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
கடந்த செவ்வாய்க்கிழமை (06) மாரடைப்பு ஏற்பட்ட ஒருவரை, அவசரமாக வைத்தியசாலைக்கு முச்சக்கர வண்டியில் கொண்டுச் சென்றபோது, வீதியில் இருந்த சேற்றுக்குள் முச்சக்கர வண்டியின் சில்லுகள் சிக்கிக்கொண்டன. அரைமணிநேர போராட்டத்தின் பின்னரே முச்சக்கர வண்டியை சேற்றுக்குள் இருந்து மீட்க முடிந்தது. இந்நிலையில், முச்சக்கர வண்டியில் அழைத்துச் செல்லப்பட்ட வயோதிபர் குறித்த இடத்திலேயே உயிரிழந்;துவிட்டார்.
சடலத்தை பரிசோதித்த வைத்தியர,; அரைமணித்தியாலத்துக்கு முன்னர் இவரை வைத்தியசாலைக்கு அழைத்து வந்திருந்தால் காப்பாற்றியிருக்க முடியும் என தெரிவித்துள்ளார்.
இவரது உயிரிழப்புக்கு வீதி புனரமைப்பின்றி காணப்படுவதே காரணமெனவும் இவ்வீதியை புனரமைத்து தருமாறு கோரியுமே பிரதேச மக்கள் புதன்கிழமை(7) சடலத்துடன் மேற்படி வீதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கர்ப்பிணிகளை இவ்வீதியால் அழைத்துச் செல்லும்போது தாம் பல்வேறு நெருக்கடிகளை எதிர்கொள்ள வேண்டியுள்ளதாகவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.
9 hours ago
26 Apr 2026
26 Apr 2026
26 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
26 Apr 2026
26 Apr 2026
26 Apr 2026