Ilango Bharathy / 2021 ஓகஸ்ட் 03 , மு.ப. 07:06 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ்.கணேசன்
டெவோன் நீர்வீழ்ச்சியின் அடிப்பகுதியிலிருந்து நேற்று முன்தினம் (01) மாலை மீட்கப்பட்ட பெண்,53 வயதான வீ.மலர்விழி என உறவினர்களால் அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இவ்வாறு சடலமாக மீட்க்கப்பட்ட பெண், மூன்று பிள்ளைகளின் தாய் என்றும், ஜூலை மாதம் (26) ஆம் திகதி வீட்டிலிருந்து காணாமற்போனமைத் தொடர்பில் திம்புள்ள-பத்தனை பொலிஸ் நிலையத்தில் முறைபாடும் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
வீட்டிலிருந்து காணாமற்போன குறித்தப் பெண், நீலம் மற்றும் வெள்ளை நிற கோடுகள் இட்ட ஆடையை அணிந்திருந்ததாக பொலில் முறைப்பாட்டில் உறவினர்கள் தெரிவித்திருந்தனர்.
குறித்த, முறைப்பாட்டுக்கு அமைவாக, பொலிசார் டெவோன் நீர்வீழ்ச்சி பகுதியில் தேடுதல் முயற்சிகளை மேற்கொண்டிருந்த நிலையில், பாதணிகள்,மற்றும் கைப்பை ஒன்று நீர்வீழ்ச்சியின் மேற்பகுதியில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டன.
இதனையடுத்து நீர்வீழ்ச்சியில் முன்னெடுக்கப்பட்ட தேடுதலுக்கு அமைய, நேற்று முன்தினம் (01) மாலை, நீர்வீழ்ச்சியின் சுமார் 200 அடி பள்ளத்தில் நீரில் மிதந்த நிலையில், இப் பெண்ணின் சடலம் பொலிசாரால் மீட்கப்பட்டுள்ளது.
இவரின் சடலம் பிரேத பரிசோதகைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ள நிலையில், குறித்த நீர்வீழ்ச்சியைப் பார்வையிடுவதற்காக, கடந்த மாதம் 18ஆம் திகதி தனது நண்பிகளுடன் வருகைத் தந்த 18 வயது யுவதியொருவர், கால் இடறி நீர்வீழ்ச்சிக்குள் விழுந்து, 16 நாள்கள்
கடந்துள்ள நிலையில், அவரது சடலம் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை என்பது
குறிப்பிடத்தக்கது.
5 hours ago
6 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
6 hours ago
8 hours ago