Freelancer / 2023 மார்ச் 16 , மு.ப. 09:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
நீலமேகம் பிரசாந்த்
மலையக அரசியல் அரங்கத்தின் 2023ஆம் ஆண்டுக்கான சர்வதேச மகளிர் தின சிறப்பு உரையரங்கம், ஹட்டன் - புகையிரத நிலைய வீதியில் அமைந்துள்ள CSC மண்டபத்தில், நாளை சனிக்கிழமை (18) காலை 9.30க்கு நடைபெறவுள்ளது.
மலையகப் பெண்கள் அரங்கத்தின் தலைவர் ஆறுமுகம் சந்திர்ரேக்கா தலைமையில் நடைபெறவுள்ள இந்நிகழ்வில், எழுத்தாளரும் அரசியல் செயற்பாட்டாளருமான கோகிலம் சுப்பையா வின் நினைவாக "வெளிநாட்டில் பணிப்பெண் வேலை: பிரச்சினைகளும் சவால்களும்" ( மலையகப் பெண்களை குறித்த சிறப்புப் பார்வை) எனும் தலைப்பில், பேராதனைப் பல்கலைக்கழக புவியியல் துறை பேராசிரியர் கலாநிதி பஸீஹா அஸ்மி பிரதான உரையாற்றவுள்ளார்.
கோகிலம் சுப்பையாவின் சமூக - இலக்கிய வாழ்க்கைக் குறிப்பையும் உரையாளர் பற்றிய அறிமுகத்தையும் மலையக அரசியல் அரங்கத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளரும் நுவரெலியா மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான மயில்வாகனம் திலகராஜா வழங்குவார். உரையைத் தொடர்ந்து இடம்பெறும் உரையாடல் அரங்கத்தையும் அவரே நெறிப்படுத்தவுள்ளார்.
அடையாளம் காணப்பட்ட பெண் செயற்பாட்டாளர்களைக் கௌரவிக்கும் நிகழ்வும் இதன்போது நடைபெறவுள்ளது.
நன்றியுரையை மலையகப் பெண்கள் அரங்கத்தின் செயலாளர் இதயஜோதி வழங்குவதுடன், நிகழ்ச்சிகளை நிஷாந்தினி சரவணகுமார் தொகுத்து வழங்கவுள்ளார். (N)

49 minute ago
15 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
49 minute ago
15 Jan 2026