2025 ஜூலை 19, சனிக்கிழமை

மலையக இளைஞர்களை ’இழிவுபடுத்த வேண்டாம்’

Nirosh   / 2020 ஏப்ரல் 30 , மு.ப. 02:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பா.நிரோஸ்

ஊரடங்கு உத்தரவை மீறி மலையக இளைஞர்கள் எவரும் கொழும்பிலிருந்து நுவரெலியாவுக்கு வருகை தரவில்லை எனத் தெரிவித்த நுவரெலியா மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பழனி திகாம்பரம், ஊரடங்கு உத்தரவை மீறி மரக்கறி லொறிகளில் இளைஞர்கள் ஏறிவந்ததாகக் கூறி அவர்களை இழிவுபடுத்த வேண்டாமெனவும் கேட்டுக்கொண்டார்.

5 ஆயிரம் ரூபாய் நிவாரணத் தொகையை, சமுர்த்தி அதிகாரிகளும் கிராம சேவகர்களும் மாத்திரம் பொதுமக்களுக்கு வழங்கினால், அதில் அரசியல் கட்சி பேதங்களிருக்காது என்றும் ஆனால், இந்தக் கொடுப்பனவுகளை வழங்குவதில் பிரதேச சபை உறுப்பினர்கள் தலையீடு செய்வதால், கட்சி ரீதியாகவே அப்பணம் வழங்கப்படுவதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார்.

இதேவேளை, கொழும்பில் உள்ள மலையக இளைஞர்கள், உண்ண உணவின்றி சொந்த ஊர்களுக்குத் திரும்பிச் செல்ல முடியாது தவித்து வருகிறார்கள் என்றும், அதிகாரம் வந்ததும் வாயில் வந்தவற்றையெல்லாம் சிலர் கூறிவருகிறார்கள் என்றும், தற்போதைய நிலையில் கொழும்பிலிருந்து நுவரெலியா மாவட்டத்துக்கு வருவதென்பது சுலபமானதல்ல என்றும் எடுத்துரைத்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X