Ilango Bharathy / 2021 செப்டெம்பர் 16 , மு.ப. 08:37 - 0 - {{hitsCtrl.values.hits}}
இரா.யோகேசன், எஸ்.சதீஸ், துவாரக்ஷன்
மலைய உரிமை மீட்பு பயணத்தை மேற்கொள்கின்ற போது, அதற்கு கல்லெரிந்தாலும் இந்த
திட்டத்தை கைவிடப்போவதில்லையென முன்னாள் மத்திய மாகாண சபை உறுப்பினரும்
மலையக மீட்பு பேரவையின் உறுப்பினருமான ராஜாராம் ராதாகிருஸ்ணன் தெரிவித்தார்.
மலையக மீட்பு பேரவையினால் ஊடகவியலாளர்களுக்கு உலர் உணவு பொருட்கள் வழங்கும்
வைபவம் ஹட்டனில் நேற்று(15) இடம்பெற்ற போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில், தற்போது தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள இவ்வேளையில் பலரும் சிரமங்களுக்குள்ளாகியிருக்கின்றனர். இதனால் ஊடகவியலாளர்களின் தேவையை அறிந்து மலையக மீட்பு பேரவை ஊடகவியாலளர்களுக்கு உலர் உணவை வழங்கி வைக்கின்றோம்.
அன்று மிக சொற்ப அளவில் ஆரம்பித்த இந்த விடயம் இன்று மிக பெரும் வரவேற்பை
பெற்றுள்ளது.அந்த வகையில் இன்று நாங்கள் நூற்றுக்கு மேற்பட்டவர்களுக்கு
பகிர்ந்தளித்துள்ளோம்.இந்த விடயத்தை மேற்கொண்டு செல்கின்ற பொதே கல்லெறிய ஆரம்பித்து விட்டார்கள்.நாங்கள் அரசியல் செய்யவில்லை.
எமது அமைப்பை தவறான கண்ணோட்டத்தில் பார்க்க கூடாது.இந்த அமைப்பற்றி
நடுநிலையாகப் பேசப்பட வேண்டும். இன்றைய சூழலில் ஊடகவியாளர்களுக்கு இந்த பொருட்கள் கூட பெரும் தட்டுபாடாக இருக்கும். அவர்கள் எங்களிடத்தில் கூறாமல் இருந்திருக்க
கூடும்.நாங்கள் அதை அறிந்து செயற்படுகின்றோம் என்றார்.
7 minute ago
1 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
1 hours ago
4 hours ago