Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 14, புதன்கிழமை
Freelancer / 2023 மார்ச் 13 , பி.ப. 10:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ்.கே. குமார்
மலையக பெருந்தோட்ட மாணவர்களின் கல்வியை அபிவிருத்தி செய்வதற்கு மலையக கல்விமான்கள், தொழிலதிபர்கள், சமூக ஆய்வாளர்கள், மலையக தொழிற்சங்க அரசியல்வாதிகள் மற்றும் நலன் விரும்பிகள் அனைவரும் ஒன்றிணைய வேண்டுமென விஷ்ணு ஆரோஹனம் தலைவரும் சமூக சேவையாளருமான கலாநிதி சதானந்தன் திருமுருகன் அழைப்பு விடுக்கின்றார்.
சமூக பொருளாதார பிரச்சினைகள், வருமானம் மற்றும் வசதிகள் குறைவினால், கல்வியில் பின் தங்கியுள்ள மலையக பெருந்தோட்ட மாணவர்களின் கல்வியை அபிவிருத்தி செய்வதற்காக " பெருந்தோட்ட மாணவர்களின் கல்வி அபிவிருத்தி மையம்" என்ற அமைப்பை ஆரம்பித்து அதனூடாகவே ஒன்றிணைய வேண்டுமென அழைத்துள்ளார்.
கல்வி புரட்சி மூலம் மலையக பெருந்தோட்ட பகுதியில் ஒரு சமூக மாற்றத்தை ஏற்படுத்த முடியும். அதற்கான ஒரு பாலமாக இந்த அமைப்பை உருவாக்கி இந்த அமைப்பின் மூலம் ஒரு நிதியம் ஆரம்பித்து அந்த நிதியின் மூலம் மலையக பெருந்தோட்ட மாணவர்களுக்கு உதவிகளைச் செய்ய முடியும் என்றார்.
பாடசாலை உபகரணங்கள், புலமை பரிசில்கள், தனியார் வகுப்புகள் மூலம் மாணவர்களுக்கு இலவசமாக கற்பித்தல், கல்வி செயலமர்வுகள், மிகவும் வறுமையான குடுபத்திலுள்ள மாணவர்களின் கல்விச் செலவை பொறுப்பேற்றல் உட்பட பெருந்தோட்ட பகுதியில் கல்வி அபிவிருத்தி நடவடிக்கைகளை மேம்படுத்துதல் போன்ற செயற்பாடுகளை மேற்கொள்வதற்காக இந்த அமைப்பை உருவாக்க ஒன்றிணைவோம் என்றார்.
கிடைக்கும் வருமானத்தை வைத்துக்கொண்டு குடும்ப வாழ்வாதாரத்தை கொண்டு செல்வதற்கே பெருந்தோட்ட தொழிலாளர்கள் பெரும் சிரமப்படுகின்றார்கள். பிள்ளைகளுக்கு கல்வி கற்பிக்க வேண்டும் என்ற ஆர்வம் பெற்றோர்களிடம் இருந்த போதிலும் அதனை செயல்படுத்த அவர்களுக்கு கிடைக்கும் ஊதியம் போதமையால் தொடர்ந்து கல்வி கற்பிக்க பெற்றோர்கள் அவஸ்த்தை படுகின்றார்கள்.இதனால் பிள்ளைகள் கல்வியை இடையில் நிறுத்திவிட்டு தொழிலுக்கு சென்று விடுகின்றார்கள். இவர்களின் கல்வியை இடையில் நிறுத்தாமல் தொடர்ந்து கல்வி கற்க நாம் மனிதாபிமானத்துடன் உதவி செய்ய ஒண்றிணைவோம் என்றார்.
ஒரு தனிப்பட்ட மனிதனால் செய்கின்ற சேவையை விட பலர் ஒன்று சேர்ந்தால் ஒரு சமூகத்தை முன்னேற்ற முடியும். கடந்த 2017ஆம் ஆண்டில் விஷ்ணு ஆரோஹனம் எனும் அமைப்பை ஆரம்பித்தேன். அதனூடாக மலையகத்தில் கல்வித் திட்டங்கள் மற்றும் சத்துணவு வேலைத்திட்டங்களை இன்று வரை முன்னெடுத்து வருகின்றோம் என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
31 minute ago
2 hours ago
3 hours ago