2026 ஜனவரி 20, செவ்வாய்க்கிழமை

மலையக நகரங்களில் சதொச கிளைகள் அமைக்கப்படும்

R.Maheshwary   / 2021 செப்டெம்பர் 03 , பி.ப. 02:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

 கே.சுந்தரலிங்கம் .

 மக்களின் நலன்கருதி மலையகத்தில் உள்ள சகல பிரதான நகரங்களிலும் ராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமானின் ஊடாக, சதொச கிளைகளைகளை  நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸ்ஸின் உப செயலாளர் சச்சிதாநந்தன் தெரிவித்தார்.

இன்று (03) அக்கரபத்தனை மன்ராசி பகுதியில் நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இன்று நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா தொற்று பரவலை தொடர்ந்து, தனியார் வர்த்தகர்கள் பொருட்களை பதுக்கியும்,தன்னிச்சியான விலையிலும் பொருட்களை விற்பனை செய்து வருகிறார்கள்.

 இதன் காரணமாக அரசாங்கம் நிர்ணய விலையில் பொருட்களை சத்தோச ஊடாக பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுத்துள்ளது.

ஆனால் தோட்ட மக்களை பொருத்த வரையில் ஒரு சில பிரதேசங்களிலேயே சதொச மூலம் பொருட்களை கொள்வனவு செய்யக்கூடிய நிலை காணப்படுகின்றது என்றார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X