Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 12, திங்கட்கிழமை
Janu / 2023 ஜூலை 10 , பி.ப. 12:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஆ.ரமேஸ்
மலையக மக்கள் கடந்த 200 வருடங்களாக முகங்கொடுத்து வரும் பிரச்சினைகளுக்கு தீர்வு பெற்றுக்கொடுக்கப்பட வேண்டும். இந்த பிரச்சினைகளுக்கு தனித்து செயற்பட முடியாது.என பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் தெரிவித்தார்.
மலையக மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் நோக்கில் தெனியாய மற்றும் இரத்தினபுரி பகுதியில் கடந்த சனிக்கிழமை அன்று இடம்பெற்ற நடமாடும் மக்கள் சேவையில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
நடமாடும் சேவையில் ஜனாதிபதியின் பாதுகாப்பு ஆலோசகர் சாகல ரத்ன நாயக மற்றும் மேற்குறிப்பிட்ட பிரதேசங்களை சேர்ந்த தொழில் திணைக்கள உத்தியோகஸ்தர்கள் கலந்து கொண்டிருந்தார்கள்.
அஸ்வெசும வேலைத்திட்டத்தில் தகுதியற்றவர்கள் இணைக் கப்பட்டு தகுதியானவர்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளார்கள். மலையக பாடசாலைகளுக்கு பாடசாலை அபிவிருத்தி செயல்பாடுகளுக்கு காணிகள் ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும். காணிப் பிரச்சினைகள், இனவாத புறக்கணிப்புகள், நலன்புரி கொடுப்பனவு வழங்கப்ப டாமை தோட்ட நிர்வாகங்களில் தனிச்சையான ஆதிக்க நிர்வாகம் இவை அனைத்திற்கும் தீர்வு பெற்றுக்கொள்ள அவசியமாகும்
நாமே எமது மக்களுக்கு பாதுகாப்பு அரணாக செயற்பட வேண்டும். உப மாகாணம் மத்திய மாகாணத்தை தொடர்ந்து இப்போது தென் மற்றும் இரத்தினபுரி மாகாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ளோம் நாம் அனைவரும் ஒன்றிணைந்த கரமாக ஓர் அணியில் ஓர் மனதோடு நின்று செயல்பட்டால் நம் பிரச்சனைகள் அனைத்திற்கும் வெகு விரைவில் தீர்வு பெற்ற தரப்படும் என்பதில் இரு வேறு கருத்துக்கள் கிடையாது என தெரிவித்தார்
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago
2 hours ago