Janu / 2025 டிசெம்பர் 09 , மு.ப. 11:33 - 0 - {{hitsCtrl.values.hits}}
நுவரெலியா மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தில் வைத்து , மலையக பெருந்தோட்ட மக்களுக்கு காணியை விடுவிக்குமாறு ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவிடம், கோரிக்கை விடுத்ததாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.
கொட்டகலை லொக்கில் தோட்டப் பகுதியில் வெள்ள அனர்த்தினால் பாதிக்கப்பட்ட மக்களின் பிள்ளைகளுக்கு பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவிடம் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய ஞாயிற்றுக்கிழமை (08) அன்று ஒரு தொகுதி கற்றல் உபகரணங்களை வழங்கி வைத்த போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
இதில் பொதுச்செயலாளர் ஜீவன் தொண்டமான் உட்பட சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ ,கொட்டகலை பிரதேச சபையின் தலைவர் ராஜமணி பிரசாத் மற்றும் பலரும் கலந்து கொண்டனர்.
இதன் போது மேலும், கருத்து தெரிவித்த நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஜீவன் தொண்டமான், “ஒவ்வொரு குடும்பங்களுக்கும் சொந்த காணிகள் இருக்கும் பட்சத்தில் எமது வாழ்க்கைத்தரம் உயர்வடையும் தேர்தல் காலங்களில் நாம் சலுகையை நம்பி பின்னால் சென்று கொண்டிருக்கின்றோம். அனைவருக்கும் வீடமைப்பு திட்டத்தை மேற்கொள்வது என்பது சாதியமற்ற விடயம் எனவும்” தெரிவித்தார்.


1 hours ago
2 hours ago
4 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
4 hours ago
5 hours ago