2025 மே 13, செவ்வாய்க்கிழமை

“மலையக மக்கள் சக்தி” உதயமாகும்

Freelancer   / 2023 ஏப்ரல் 06 , பி.ப. 05:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

 சுதத் எச்.எம்.ஹேவா

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் உரிமைகளை வென்றெடுத்தல் இதுவரையிலும் தீர்க்கப்படாத பிரச்சினைகளுக்கு தீர்வு காணுதல் உள்ளிட்ட நோக்கங்களை அடிப்படையாகக் கொண்டு “மலையக மக்கள் சக்தி” எனும் பெயரில் புதிய தொழிற்சங்கமொன்று உதயமாகவுள்ளது.

மலைய மக்கள் இலங்கைக்கு வருகைதந்து 200 வருடங்கள் ஆகியவிட்டது. எனினும், அம்மக்களுக்கு காணி அதிகாரம் இல்லை. ஆகையால் அம்மக்களுக்கு காணி அதிகாரத்தை பெற்றுக்கொடுத்தல், கல்வியை மேம்படுத்தல் முக்கியமானது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

புதிய தொழிற்சங்கத்தின் தலைவராக ராமன் செந்தூரன், அதன் பொதுச் செயலாளர் திருமதி தியாகராஜா ஜெயலலிதா, துணைத் தலைவர் எஸ்.  சண்முகப்பிரியா, பிரதிச் செயலாளராக  சின்னகருப்பன் விமலநாதன், பொருளாளராக தியாகராஜா சுதர்ஷனி ஆகியோர் கடமையாற்றுவர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X