2025 டிசெம்பர் 22, திங்கட்கிழமை

மலையக ரயில் சேவைகள் முடங்கின

R.Maheshwary   / 2022 ஓகஸ்ட் 01 , பி.ப. 04:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

சீரற்ற வானிலை காரணமாக மலையகத்துக்கான ரயில் சேவைகள் முழுமையாக முடங்கியுள்ளதாக ரயில் நிலைய அதிபர்கள் சங்க செயலாளர் தெரிவித்தார்.

குறிப்பாக ரயில் பாதையில் மரங்கள் முறிந்து விழுந்துள்ளதுடன், மண்மேடுகளும் சரிந்து விழுந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

 கொட்டகலை- தலவாக்கலை, கிரேட்வெஸ்டன், ரொசல்ல- வட்டவளை, வட்டவளை- கலபொட, இங்குருஓயா ஆகிய ரயில் நிலையங்களுக்கிடையில் இந்த அனர்த்தங்கள் பதிவாகியுள்ளன.

இதனால் கொழும்பு கோட்டையிலிருந்து பதுளை வரை பயணித்த ரயில், நாவலப்பிட்டி ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டுள்ளது.

மேலும் ரயிலுக்குள் இருக்கும் பயணிகளுக்கு மாற்று ஏற்பாடுகள் செய்ய முடியாத நிலையும் ஏற்பட்டுள்ளதாக அவர்  தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாக இன்று கொழும்பு கோட்டையிலிருந்து பதுளை வரையும் பதுளையிலிருந்து கொழும்பு கோட்டை வரை  பயணிக்கவிருந்த இரண்டு ரயில்கள் இரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X