ஆ.ரமேஸ் / 2019 ஓகஸ்ட் 30 , மு.ப. 11:17 - 0 - {{hitsCtrl.values.hits}}

‘மலையகத் தமிழர் ஒன்றியம்’ எனும் புதிய அமைப்பு, நுவரெலியாவில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலை மய்யமாகக் கொண்டு, ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு ஆதரவு வழங்கும் முகமாகவே, இந்த அமைப்புச் செயற்படவுள்ளது.
இந்த அமைப்புக்கான நிர்வாக சபை உறுப்பினர்கள், 25ஆம் திகதி தெரிவு செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில், அமைப்பின் தலைவராக நவரட்ணம் சத்தியபிரகாஷும் பொதுச் செயலாளராக நுவரெலியா மாநரக சபையின் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பெண் உறுப்பினர் சிவகுமாரன் சிவரஞ்சனியும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
இது தொடர்பாகக் கருத்துத் தெரிவித்த பொதுச் செயலாளர் சிவரஞ்சனி,
இந்த ஒன்றியத்தின் முதன்மையான வேலைத்திட்டம், நாடாளுமன்ற உறுப்பினர் சி.பீ ரத்நாயக்கவின் வழிகாட்டலில், இன்று (30) ஆரம்பிக்கப்படவுள்ளதாகத் தெரிவித்தார்.
நுவரெலியா மாவட்ட தமிழ் மக்களின் அபிலாசைகளைப் பூர்த்தி செய்யும் முகமாகவே, இந்த ஒன்றியம் செயற்படும் என்றும் நுவரெலியா மாவட்ட மக்களின் குறைபாடுகளை எடுத்துரைக்க, பொதுஜன பெரமுனவுக்குச் சரியான தமிழ் அமைப்பொன்று இல்லாமையாலேயே, இந்த அமைப்பு உருவாக்கப்பட்டது என்றும் அவர் கூறினார்.
39 minute ago
9 hours ago
02 May 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
39 minute ago
9 hours ago
02 May 2026