2025 ஜூலை 07, திங்கட்கிழமை

மலையகத் தமிழர்கள் ‘விட்டுப்போக இல்லை’

Kogilavani   / 2017 நவம்பர் 03 , பி.ப. 12:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்த நாட்டில் வாழும் மலையகத்  தமிழர்கள், நாட்டை விட்டுக்கொடுக்கவும் இல்லை; விட்டுப்போகவும் இல்லை. மலையகத் தமிழர்களின் அடையாளம் இந்த அரசமைப்பின் ஊடாக உறுதிப்படுத்தப்பட வேண்டும் என, தமிழ் முற்போக்குக் கூட்டணியின் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.திலகராஜ் தெரிவித்தார்.   

அரசமைப்புக்கான அரசமைப்புச் சபை வழிப்படுத்தல் குழுவின் இடைக்கால அறிக்கை தொடர்பான விவாதம், அரசமைப்பு சபையில் நேற்று(02) நான்காவது நாளாகவும் இடம்பெற்றது. இந்த விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.   

“புதிதாக உருவாக்கப்படும் இரண்டாவது சபையானது மாகாண சபை உறுப்பினர்களைக் கொண்டதாக உருவாக்கப்படும் என அரசமைப்பு வழிநடத்தல் குழுவின் இடைக்கால அறிக்கையில் யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது. எனினும், அது இனங்களை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட வேண்டும் என நாம் கோரிக்கை முன்வைக்கிறோம். இது தொடர்பில் கலந்துரையாடவும் நாம் தயாராக இருக்கிறோம்” என்றார்.   

“மலையகத் தமிழர்கள் கலாசார ரீதியாக, பண்பாட்டு ரீதியாக வரலாற்றில் தனி இனமாக இடம்பிடித்திருக்கிறார்கள். இலங்கைத் தமிழர்களுக்கும் மலையகத் தமிழர்களுக்கும் வேறுபாடு இருக்கிறது.

இலங்கைத் தமிழர்கள் நாட்டிலிருந்து பிரிந்து செல்வதற்குப் போராடிய, வேறுபட்ட அரசியல் நோக்கத்தைக் கொண்டவர்களாக காணப்படுகிறார்கள். ஆனால் மலையகத் தமிழர்கள் நாட்டை விட்டுக்கொடுக்கவும் இல்லை; விட்டுப்போகவும் இல்லை” என்றும் அவர் குறிப்பிட்டார்.   

“எமக்கு, இந்த நாட்டின் குடியுரிமையைத் தாருங்கள் என்றுதான் நாம் ஆரம்பகாலம் முதல் போராடி வருகிறோம். புதிய அரசமைப்பின் ஊடாக, மலையகத் தமிழர் என்ற அடையாளம் உறுதிப்படுத்தப்படல் வேண்டும்.

அடிமட்டத்தில் அதிகாரத்தைப் பகிர்வதன் ஊடாகவே நான் முன்னோக்கிப் பயணிக்க முடியும். அவ்வாறு நடைபெற்றிருந்தால், இன்று பிரதேச சபைகளை அதிகரிக்குமாறு வீதியில் இறங்கிப் போராட வேண்டிய அவசியம் இருந்திருக்காது” என்றார்.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .