2025 ஜூலை 10, வியாழக்கிழமை

‘மலையகத்தின் கௌரவத்தைப் பாதுகாக்கவும்’

கு. புஷ்பராஜ்   / 2017 ஒக்டோபர் 17 , பி.ப. 05:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

“கொழும்பில் இருந்து தமது வீடுகளுக்கு வரும் இளைஞர்கள், பொது இடங்களில் மது அருந்துவதை தவிர்த்து மலையத்தின் கௌரவத்தை பாதுகாக்கும் வகையில் நடந்து கொள்ளவேண்டும்” என, பிரிடோ நிறுவனம் கோரிக்கை விடுத்துள்ளது. 

இது குறித்து, அந்நிறுவனம் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,  

பிரிடோ நிறுவனம் சிறுவர் கழகங்களின் ஒத்துழைப்புடன் கடந்த பத்து வருடங்களாக மது இல்லா தீபாவளி பரிந்துரையை முன்னெடுத்து வருவதோடு, இந்த வருடமும் அதனை முன்னெடுக்கிறது.  

குடும்பங்களிலுள்ள பெண்களும், சிறுவர்களும் மகிழ்ச்சிகரமானதும், சமாதானமானதுமான சூழலில் தீபாவளியை கொண்டாட உதவுங்கள் என்ற கோரிக்கையோடு முன்னெடுக்கப்பட்ட மது இல்லா தீபாவளி பரிந்துரை நல்ல பலனை தந்துள்ளது.  

பொதுவாக தீபாவளியை கொண்டாட கொழும்பில் இருந்து தமது வீடுகளுக்கு வரும் இளைஞர்கள், மது அருந்தி அநாகரீகமாக நடந்து கொள்கிறார்கள். இது போன்ற குற்றச்சாட்டுகள் இளைஞர்கள் மீது கடந்த காலங்களில் முன்வைக்கப்பட்டாலும், மது இல்லா தீபாவளி பரிந்துரை ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர் இந்த விடயத்திலும் முன்னேற்றம் காணப்பட்டுள்ளது.  

எனவே, கொழும்பு உள்ளிட்ட வெளியிடங்களில் வேலை செய்யும் எமது மலையக இளைஞர்கள், மலையக சமூகத்தின் கௌரவத்தை பாதுகாக்கும் பொறுப்புடையவர்களாவர்” எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .