R.Maheshwary / 2022 ஜூலை 10 , பி.ப. 03:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
பி.கேதீஸ்
மலையக வீதிகளில் மிக குறைந்த அளவிலான பஸ்களே சேவையில் ஈடுபடுவதால் தமது உயிருக்குப் பாரிய ஆபத்து ஏற்பட்டுள்ளதாக பயணிகள் தெரிவிக்கின்றனர்.
தனியார் பஸ்களுக்கு டீசல் கிடைக்காததாலும், இ.போ.ச பஸ்களுக்கு டயர் கிடைக்காததாலும் மலையக பகுதிகளில் சேவையில் ஈடுபடும் பஸ்களின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்துள்ளன.
இதனால் தங்கள் தேவைகளுக்காகவும், அன்றாடக் கடமைகளுக்காகவும் நகரங்களுக்குச் செல்லும்போதும் வரும்போதும் பஸ்களின் மேற்கூரை, முன் மற்றும் பின்பகுதியில் காணப்படும் பொதிகள் வைக்கும் இடங்களிலும் மற்றும் கதவுகளில் தொங்கியபடியும் மிகவும் ஆபத்தான பயணத்தை மேற்கொள்ள வேண்டியுள்ளதாக பயணிகள் தெரிவிக்கின்றனர்.
மலையகத்தின் சில தோட்ட வீதிகளில் தனியார் மற்றும் இ.போ.ச பஸ்கள் முற்றாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாகவும் பல வீதிகளில் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான பஸ்கள் கால அட்டவணையின்றி இயங்குவதாகவும் மக்கள் குறிப்பிடுகின்றனர்.
4 hours ago
4 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
4 hours ago
6 hours ago