R.Maheshwary / 2022 ஜூலை 03 , மு.ப. 09:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
ரஞ்சித் ராஜபக்ஸ
மலையகத்தில் நேற்று (2) இரவு தொடக்கம் பெய்து வரும் கடும் மழையால் பல வீடுகள் நீரில் மூழ்கியுள்ளதாக நுவரெலியா மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் உதவி பணிப்பாளர் ரஞ்சித் அலஹகோன் தெரிவித்துள்ளார்.
இதற்கமைய கொட்டகலை- கொமர்சல் சமாதானபுர வீடமைப்புத் திட்டத்தில் 5 வீடுகள் நீரில் மூழ்கியதால், 5 வீடுகளைச் சேர்ந்த 20 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அத்தடன் டெவன் பகுதியிலும் வீடொன்று நீரில் மூழ்கியுள்ளது.
மேலும் வட்டவளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹைட்ரி தோட்டத்தின் ஊடாக ஹட்டன்ஓயாவுக்கு நீரைக் கொண்டு வரும் கால்வாய் பகுதியில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக குறித்த தோட்டத்தைச் சேர்ந்த பல வீடுகள் நீரில் மூழ்கியுள்ளதுடன் பாதிக்கப்பட்ட வீடுகளில் வசித்தவர்கள் பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
மேலும் காசல்றீ மற்றும் மவுசாக்கலை நீர்தேக்க பகுதிகளில் பெய்து வரும் கடும் மழையால், கெனியோன் நீர்த்தேக்கத்தின் இரண்டு வான் கதவுகள் அதிகாலை தொடக்கம் காலை 8 மணிவரை திறந்து விடப்பட்டிருந்தன.
ஹட்டன்- நுவரெலியா, ஹட்டன்- கொழும்பு பிரதான வீதிகளின் பல இடங்களில் மண்மேடுகள் சரிந்து விழுகின்றமையால் சாரதிகள் அவதானத்துடன் வாகனங்களை செலுத்துமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளனர்.

15 minute ago
26 minute ago
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
26 minute ago
3 hours ago
3 hours ago