R.Maheshwary / 2021 ஜூலை 18 , பி.ப. 02:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ்.கணேசன்
மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு எதிரான அடக்குமுறைகளை ஓரணியில் திரண்டு எதிர்ப்பதற்கும், தேசிய பெருந்தோட்ட தொழிற்சங்க சம்மேளனம் எனும் கூட்டணியை உருவாக்குவதற்கும் மலையகத்தை மையமாகக் கொண்டு இயங்கும் பிரதான தொழிற்சங்கங்கள் இணக்கம் வெளியிட்டுள்ளன.
இணையவழி ஊடாக நடைபெற்ற கலந்துரையாடலின் போதே இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ், தொழிலாளர் தேசிய சங்கம், மலையக மக்கள் முன்னணி உட்பட மலையகத்தில் செயற்படும் 12 தொழிற்சங்கங்கள் இதற்கான விருப்பத்தை வெளியிட்டதாக மலையக மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளர் பேராசிரியர் விஜயசந்திரன் தெரிவித்தார்.
ஹட்டனில் இன்று (18) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
தொடர்ந்து தெரிவித்த அவர்,
“ பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நாள் சம்பளமாக ஆயிரம் ரூபா வழங்கப்பட வேண்டும் என்ற தீர்மானம் எடுக்கப்பட்ட பின்னர், தொழிலாளர்கள்மீது அடக்குமுறைகள் கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ளன.
மறுபுறத்தில் தோட்டப்பகுதிகளில் மலையக தொழிற்சங்கங்களின் செயற்பாடுகளை தடுப்பதற்கு கம்பனிகள் முற்படுகின்றன. இது பயங்கரமானதொரு நிலையாகும். தொழிற்சங்க கட்டமைப்பு சிதைக்கப்பட்டால் தொழிலாளர்கள் உதிரிகளாக்கப்படுவார்கள். ஒற்றுமை சிதைக்கப்படும். அடக்குமுறை தலைதூக்கும் என்றார்.
7 hours ago
8 hours ago
20 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
8 hours ago
20 Jan 2026