2026 ஜனவரி 20, செவ்வாய்க்கிழமை

மலையகத்தில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

Freelancer   / 2021 ஓகஸ்ட் 07 , பி.ப. 05:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

கே.சுந்தரலிங்கம் 

மலையகத்தில் கடந்த சில தினங்களாக பெய்து வரும் அடை மழை காரணமாக மக்களின் இயல்பு வாழக்கை பாதிக்கப்பட்டுள்ளது.

நீரேந்தும் பிரதேசங்களில் அதிக மழை வீழ்ச்சி பதிவாவதால் பிரதான நீர்த்தேக்கங்களின் நீர் மட்டமும் வெகுவாக உயர்ந்து வருகின்றன.

மேலும், பல இடங்களில் மண்சரிவு அபாயம் ஏற்பட்டுள்ளன. இதனால்  மிகவும் அவதானமாக இருக்குமாறு மக்களிடம் இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் கோரிக்கை விடுத்துள்ளது.

மேலும், ஹட்டன் - கொழும்பு, ஹட்டன் - நுவரெலியா, ஹட்டன் - மஸ்கெலியா, ஹட்டன் - பொகவந்தலாவை, பலாங்கொடை - பொகவந்தலாவ உள்ளிட்ட பிரதான பல வீதிகளில் பனி மூட்டம் காணப்படுவதனால் இந்த வீதிகளை பயன்படுத்தும் வாகன சாரதிகள் மிகவும் அவதானமாக தங்களது வாகனங்களை செலுத்து வேண்டும் என போக்குவரத்து பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர். R


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X