Freelancer / 2021 டிசெம்பர் 21 , மு.ப. 09:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
கே.சுந்தரலிங்கம்
அரச வைத்திய உத்தியோகஸ்த்தர்கள் ஆரம்பித்துள்ள நாடு தழுவிய வேலை நிறுத்த போராட்டம் காரணமாக மலையக சுகாதார சேவைகள் பெரும் பாதிப்புக்குள்ளாகின.
இதனால் மலையக பகுதியில் உள்ள அரச வைத்தியசாலைகளின் பணிகள் முடங்கின.
பொருளாதார நெருக்கடியில் வாழும் பெருந்தோட்ட மக்கள் பெரும்பாலும் அரச வைத்தியசாலைகளையே நம்பியே சிகிச்சைக்காக வருகை தருகின்றர்.
இன்றைய தினம் வைத்தியர்கள் வேலை நிறுத்தப்போராட்டத்தில் குதித்ததன் காரணமாக டிக்கோயா கிளங்கன் ஆதார வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக தூர பிரதேசங்களில் இருந்து வருகை தந்த மக்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கினர்.
வெளிநோயாளர் பிரிவு உட்பட பல்வேறு சுகாதார சேவைகள் இன்று இடம்பெறாததன் காரணமாக மக்கள் ஏமாற்றத்துடன் வீடு திரும்பினர்.
எனினும் அவசர சிகிச்சைப்பிரிவு, சிறுவர் சிகச்சை பிரிவு புற்று நோய் பிரிவு,கொவிட் தடுப்பூசி பெற்றுக்கொடுக்கும் பிரிவுகள் ஆகியன தங்கு தடையின்றி வழமை போல் இயங்கின.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .