2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

மலையகத்தில் மரக்கறிகளை பிடுங்கி எறிந்தனர்

Editorial   / 2021 ஒக்டோபர் 18 , பி.ப. 07:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

எம்.கிருஸ்ணா

லிந்துலை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட மௌசாஎல்ல தோட்டத்தில் விவசாயிகளும், தோட்டத்  தொழிலாளர்களும் இன்று (18) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

இரசாயன உரத் தட்டுபாடு காரணத்தில் விவசாயமும் தேயிலை தொழிற்துறையில் பாதிப்படைந்துள்ளதாக ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் தெரிவித்தனர்.

தலவாக்கலை- லிந்துலை நகரசபையின் முன்னாள் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியில் நுவரெலியா மாவட்ட அமைப்பாளருமான அசோகசேபால தலைமையில் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

சேதன பசளையை பயன்படுத்தி  விவசாயத்தை சரியாக முன்னெடுக்க முடியவில்லை. இரசாயன உரம் இன்மையால் விவசாயத்துறையும் தேயிலை தொழிற்துறையும் பாதிப்படைந்துள்ளது என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.    சேதனை பசளையை பயன்படுது்தி   முன்னெடுக்கப்பட்ட விவசாய நிலங்களுக்குச் சென்ற ஆர்ப்பாட்டக்காரர்கள், சே​தன பசளையால் பாதிப்படைந்திருந்த மரக்கறிகளை பிடுங்க வீசியெறிந்து அழித்தனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .