Editorial / 2018 மே 06 , பி.ப. 04:07 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.கணேசன்
மலையகத்தின் இரண்டு பிரதான கட்சிகளின் மே தினக் கூட்டங்களும் ஊர்வலங்களும், தலவாக்கலை மற்றும் நுவரெலியா பகுதிகளில் நாளை (07) நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்தவகையில் தமிழ் முற்போக்கு கூட்டணியின் மேதினக் கூட்டம், தலவாக்கலை பொது மைதானத்தில் இடம்பெறவுள்ளது.
இதேவேளை, இக்கூட்டங்கள், தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் அமைச்சர் மனோ கணேசன், அமைச்சர் பி.திகாம்பரம் மற்றும் இராஜாங்க அமைச்சர் வீ.இராதாகிருஷ்ணன் ஆகியோரின் தலைமையில் நடைபெறவுள்ளதோடு, தலவாக்கலை நகரத்திலிருந்து தலவாக்கலை நகர சபை மைதானம் வரை, மே தினப் பேரணியொன்றுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், தமது மே தின நிகழ்வுகளை நுவரெலியா நகரில் நடத்தவுள்ளதாக, இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் ஊடக பிரிவு குறிப்பிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
2 hours ago
7 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
7 hours ago
9 hours ago