R.Maheshwary / 2022 ஜூலை 06 , மு.ப. 09:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
துவாரக்ஷான்
மலையக பிரதேசத்தில் அண்மைக்காலமாக விஷ பாம்புகள் அதிகரித்து வருகின்றன.
இதனால் தோட்டத் தொழிலாளர்கள் அச்சத்தின் மத்தியிலேயே, தமது கடமைகளை செய்து வருகின்றனர்.
அனேகமான தோட்ட நிர்வாகங்கள், தேயிலை மலைகளை முறையாக பராமரிக்காமல் பா பராமரிப்புக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் இலாப நோக்கில் செயல்படுவதால் அதிகமான பகுதிகள் காடாகி கைவிடப்பட்டுள்ள நிலை காணப்படுகிறன.
இதன் காரணமாக உயிர் அச்சத்துடன் ஒவ்வொரு நாளும் தொழில் செய்யவேண்டிய நிலைமை தோன்றியுள்ளது.
இந்த நிலையில், வட்டக்கொட- மெதக்கும்புர நியூமிடில் தோட்டத்தில் இரண்டாம் இலக்க தேயிலை மலையில் கொழுந்து பறித்துகொண்டிருந்த 43 வயதுடைய ஒரு பிள்ளையின் தாய்
விசபாம்பு தீண்டியதால் நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருகின்றார்.
அத்துடன், அக்கரப்பத்தனை பெரிய நாகவத்தை தோட்டத்திலும் நேற்று முன்தினம் (4) தேயிலை மலையில் தொழில் செய்துகொண்டிருந்த 36 வயதுடைய ஆண் ஒருவரின் காலில் விஷப்பாம்பு சுற்றியுள்ளது.
இதனால் அவரது காலின் அடிப்பகுதியில் கருப்பு நிறத்தில் மாற்றம் ஏற்பட்டதாகவும் குறித்த நபர் அக்கரபத்தனை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையின் பின் வீடு திரும்பி உள்ளார் என்றும் வைத்தியசாலை தரப்பினர் தெரிவித்தனர்.
15 minute ago
26 minute ago
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
26 minute ago
3 hours ago
3 hours ago