Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 04, ஞாயிற்றுக்கிழமை
Gavitha / 2020 நவம்பர் 30 , பி.ப. 06:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஆ.ரமேஸ், எஸ்.சதீஸ், செ.தி.பெருமாள்
மலையகத்தில், நேற்று (29), சில பகுதிகளில், தோட்டப்பாதை அபிவிருத்திக்கான ஆரம்பக்கட்டப் பணிகள் நடைபெற்றன.
இதன்பிரகாரம், நுவரெலியா பிரதேச சபைக்குட்பட்ட நானு-ஓயா, ரதெல்ல கீழ்ப்பிரிவு தொடக்கம் ரதல்ல மேற்பிரிவு புகையிரத நிலையம் வரையிலான 4 கிலோமீற்றர் வரையிலான பிரதான சுற்றுப்பாதை, 50 மில்லியன் ரூபாய் செலவில் அபிவிருத்தி செய்யப்படவுள்ளது.
இதேவேளை, நுவரெலியா பிரதேசசபைக்குட்பட்ட மட்டுக்கலை சந்தி தொடக்கம் ரதெல்ல - லெங்ன்டெல் வரையிலான 3.5 கிலோமீற்றர் குறுக்குப் பாதை 50 மில்லியன் ரூபாய் செலவில் அபிவிருத்தி செய்யப்படவுள்ளது.
நாட்டைக் கட்டியெழுப்பும் சௌபாக்கிய தொலைநோக்கு மற்றும் ஒரு இலட்சம் கிராமிய வீதிகள் அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் இந்த வீதி அபிவிருத்திப் பணி ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இந்நிகழ்வு, நெடுஞ்சாலைகள் அபிவிருத்தி அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவின் வழிகாட்டலில், தோட்ட வீடமைப்பு மற்றும் சமுதாய உட்கட்டமைப்பு இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமானின் வேண்டுகோளுக்கிணங்க, நுவரெலியா பிரதேச சபை தவிசாளர் வேலு யோகராஜ் தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
அத்துடன், வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் ஊடாக, ஹட்டன் பொகவந்தலாவ பிரதான வீதியின் பொகவந்தலாவை - கிவ் தோட்டம் வரையான வீதியை கார்ப்பட் இடும் பணி ஆரம்பித்து வைக்கப்பட்டது.
03 கிலோமீற்றர் தூரம் கொண்ட இந்த வீதி, 46 மில்லியன் ரூபாயில் செலவில் புனரமைக்கப்படவுள்ளது.
இந்நிகழ்வில், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின்
பொதுச்செயலாளரும் வீடமைப்பு மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு சமுதாய
அபிவிருத்தி இராஜாங்க அமைச்சருமான ஜீவன் தொண்டமான் கலந்து கொண்டு இந்த வேலைத்திட்டத்தை ஆரம்பித்து வைத்தார்.
மேலும், மஸ்கெலியா பிரதேச சபைக்குட்பட்ட நல்லதண்ணி நெடுஞ்சாலையிலுள்ள முள்ளுகம சந்தியில் இருந்து மரை நோக்கிச் செல்லும் பிரதான வீதியின் ஒன்றரை கிலோமீற்றர் வீதி, கார்ப்பட் செய்யப்பட்டது.
நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களும் வனஜீவராசி வனவள துறையின் அமைச்சர் சி.பி.இரத்நாயக்கவால், இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
19 minute ago
2 hours ago
2 hours ago