2025 மே 13, செவ்வாய்க்கிழமை

’மலையகம் - 200’க்கு யோசனை தாருங்கள்

Freelancer   / 2023 ஏப்ரல் 27 , பி.ப. 05:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்திய வம்சாவளி தமிழ் மக்கள் இலங்கைக்கு வருகை தந்து 200 வருடங்கள் நிறைவடைந்துள்ள நிலையில், அம்மக்கள் இலங்கையின் அபிவிருத்தி மற்றும் இதர விடயங்களுக்கு வழங்கிய பங்களிப்பை கௌரவித்து, அவர்களை பாராட்டுவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவுள்ளது.

இதற்காக 'மலையகம் - 200' எனும் தொனிப்பொருளின் கீழ் பல நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன. இதன் ஓர் அங்கமாக விசேட முத்திரையொன்றை வெளியிடுவதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.

அந்த முத்திரை எவ்வாறு வடிவமைக்கப்பட வேண்டும், அதில் உள்ளடக்க வேண்டிய விடயங்கள் எவை என்பன குறித்து மக்களிடமிருந்தும் கருத்துகள் மற்றும் யோசனைகள் கோரப்பட்டுள்ளன.

மலையக கலை, கலாசசார பண்பாட்டு மற்றும் பாரம்பரிய விழுமியங்களை பிரதிபலிக்கும் வகையில் இருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

எனவே, உங்களிடமும் ஏதேனும் யோசனை அல்லது மாதிரியை (முத்திரை எவ்வாறு இருக்க வேண்டும் என வரைதல்) தயாரிக்ககூடியதாக இருந்தால் அவற்றை உரிய வகையில் மே மாதம் 10ம் திகதிக்குள்,  நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சு

இலக்கம் 45,புனித மைக்கல் வீதி ,கொழும்பு - 03. என்ற முகவரிக்கு 'பதிவு' தபாலில் அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொள்கின்றோம்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X