Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 08, வியாழக்கிழமை
Janu / 2023 செப்டெம்பர் 11 , மு.ப. 10:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
அரசியல் மற்றும் தொழில் சங்க நடவடிக்கையினை கொழும்பு தொடக்கம் மலையகம் முழுவதும் தாம் பிரவேசிக்க உள்ளதாக ஐக்கிய தொழிலாளர் முன்னணியின் தலைவரும் கல்வி இராஜாங்க அமைச்சருமான அருணாசலம் அரவிந்தகுமார் தெரிவித்தார் . ஞாயிற்றுக்கிழமை (10) மாலை தலவாக்கலை பகுதியில் ஐக்கிய தொழிலாளர் முன்னணியின் காரியாலயத்தை திறந்து வைத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார்.
இதன் போது மேலும் கருத்து தெரிவித்த கஅவர், அமரர் தலைவர் சந்திரசேகரின் வழியில் நான் செயல்பட்டு கட்சி பணிகளிலும் ஈடுபட்டு வந்த போது மலையக மக்கள் முன்னணியில் எனக்கு அங்கீகாரம் கிடைத்தது. அந்த அமைப்பில் அரசியல் தலைவர் என்ற பதவியினை மறைந்த தலைவர் சந்திரசேகரன் அவர்கள் ஏற்படுத்தி கொடுத்தார்.
“அந்த அமைப்பில் நான் தற்பொழுது இல்லாவிட்டாலும் கூட பதுளை மாவட்டத்தில் நிலையானதொரு அங்கிகாரம் கிடைத்துள்ளது. அதன் அடிப்படையில் தலாவாக்கலை நகரில் முதல் காரியாலயம் திறக்கப்பட்டுள்ளது. ஐக்கிய மக்கள் முன்னணி ஐக்கிய தொழிலாளர் முன்னணி என்றவகையில் இந்த காரியாலயம் இயங்கும்.
கடந்த காலத்தைவிட தற்பொழுது கல்வித்துறையில் ஒரு முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது எமது ஜனாதிபதி கல்வி துறைக்கு அதிகூடிய அக்கறையினை செலுத்தி வருகிறார். பாடசாலைகளில் காணப்படுகின்ற ஆசிரியர் பற்றாகுறையினை நிவர்த்தி செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறோம்.
கொரோனா காலப்பகுதிக்கு பிறகு நாட்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடிக்கு பிறகு இன்று சுகாதார துறையில் மருந்து வகைகளுக்கான தட்டுபாடுகள் ஏற்பட்டுள்ளது. இருந்தாலும் கூட எமது அரசாங்கத்தின் ஊடாக மேற்கொள்ளபட்டு வருகின்ற முயற்சியின் காரணமாக நாம் பழைய நிலமைக்கு தற்பொழுது வந்து கொண்டு இருக்கின்றோம்.
பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள விடயம் தொடர்பில் அது தொடர்பாக சம்பந்தப்பட்டவர்களால் அடிமட்டத்தில் இருந்து கலந்துரையாடப்பட்டு வருகிறது அதில் கூட்டு ஒப்பந்தத்தில் உள்ள தொழிற்சங்கங்கள் அக்கறையோடு செயற்பட்டு வருகிறது. எதிர்வரும் காலங்களில் இந்த கூட்டு ஒப்பந்த முறை புதுப்பிக்கபடுகின்ற நிலையில் இருக்கிறது . பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு கூட்டு ஒப்பந்தம் ஊடாக சம்பளம் அதிகரிக்கப்படாவிட்டால் அடுத்த கட்ட நடவடிக்கையாக சம்பள நிர்ணய சபையின் ஊடாக சம்பள உயர்வினை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்” என குறிப்பிட்டார்.
எஸ்.சதீஸ்
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
8 hours ago
8 hours ago