Kogilavani / 2020 டிசெம்பர் 25 , பி.ப. 02:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.குமார்
இணையவழி கற்றலை முறையாகப் பெற்றுக்கொள்ள முடியாது, பலங்கொடை பிரதேச மாணவர்கள் பாரிய சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.
பலாங்கொடை பிரதேசத்தக்கு உட்பட்ட மொலமுர, நவநெளிய, உடவெல, பியங்கிரிய, வதவுல ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த சுமார் மாணவர்களே இவ்வாறு சிரமங்களுக்கு எதிர்கொண்டு வருகின்றனர்.
மேற்படி மாணவர்கள் இணையவழி கற்கையையே மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் மேற்படி பிரதேசங்களில் முறையான இணையவழி வசதி இன்மையால் குறித்த மாணவர்கள் சுமார் ஒரு கிலோமீற்றர் தொலைவிலுள்ள மலை உச்சிக்குச் சென்றே கற்றலை மேற்கொள்கின்றனர்.
பிள்ளைகளின் பாதுகாப்பைக் கருத்திற்கொண்டு பெற்றோரும் அவர்களுடன் மலைக்குச் சென்றுவருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
எனவே மாணவர்கள் இணையவழி கற்றலை முறையாக மேற்கொள்வதற்கான வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் முன்வர வேண்டும் என்று, பெற்றோர் கோரிக்கை விடுக்கின்றனர்.


4 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
7 hours ago