2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

மழையால் மரங்கள் வேருடன் சாய்ந்தன

Janu   / 2025 ஜூன் 01 , பி.ப. 03:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

நுவரெலியா மாவட்டத்தில் கடும் காற்றுடன் பெய்து வரும் கடும் மழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில் நானுஓயா வங்கி ஓயா கீழ் பிரிவில் குடியிருப்பொன்றின் மீது மரம் ஒன்று வேரோடு சாய்ந்ததன் காரணமாக அக் குடியிருப்பு பகுதியளவில் சேதமடைந்துள்ளது.

மேலும் தலவாக்கலை கொரீன் தோட்டத்தில் 200 வருடம் பழமை வாய்ந்த மரம் ஒன்று வேரோடு சாய்ந்து விழுந்துள்ளது. தலவாக்கலை  ஹொலிரூட் கீழ் பிரிவில் குடியிருப்பொன்றின் மீது கித்துள் மரம் ஒன்று முறிந்து விழுந்ததில் குடியிருப்பு பகுதியளவில் சேதமடைந்துள்ளது. குடியிருப்புக்குள் இருந்தவர்கள் தெய்வாதீனமாக உயிர் தப்பியுள்ளனர்.

மேலும் தலவாக்கலை ட்ரூப் தோட்டத்தில் வீதியோரமாக வளர்ந்திருந்த கருப்பந்தேயிலை மரங்கள் வேருடன் முறிந்தும் வீழ்ந்துள்ளமையால் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டதோடு மரங்களை வெட்டி வீதியை சீர் செய்யும் நடவடிக்கைகளில் தோட்ட நிர்வாகமும் பொதுமக்களும் ஈடுபட்டனர்.

பி.கேதீஸ்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X