2025 மே 13, செவ்வாய்க்கிழமை

மழைவேண்டி புத்தருக்கு பூஜை

Freelancer   / 2023 ஏப்ரல் 02 , பி.ப. 06:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

செ.தி.பெருமாள்

கடந்த சில மாதங்களாக மத்திய மலைநாட்டில் கடும் வரட்சியான காலநிலை நிலவுகின்றது. இதனால் நீர்த் தேக்கங்களின் நீர் மட்டம் அதன் கொள்ளளவை விட சுமார் 62 அடிக்கு குறைந்துள்ளது.

இதனால் நீரில் மூழ்கியிருந்த ஆலயங்கள் அனைத்தும் வெளியில் தென்படுகின்றன. அங்கு செல்லும் மக்கள் வழிபாடுகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

மஸ்கெலியாவில் தென்படும்  புத்த பகவான் சிலைக்கும், அங்கு அக்காலத்தில் இருந்த அரச மரத்தின் அடிப்பகுதிக்கும் விசேட பூசைகள் மேற்கொள்ளப்பட்டன.

நிகழ்வில் ரக்காடு கிராமத்தில் உள்ள பௌத்த விஹாரையின் தேரர் மற்றும் அங்கு உள்ள அதிரடி படையினர் கிராம மக்கள் இன, மத பேதமின்றி பூஜையில் கலந்து கொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X