பா.திருஞானம் / 2019 பெப்ரவரி 03 , பி.ப. 03:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
அனர்த்த முகாமைத்துவ அமைச்சு, வீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சு ஆகியன இணைந்து, ஹப்புத்தளை, தம்பேதன்ன மவுசாகல தோட்டத்தில், மண்சரிவினால் பாதிக்கப்பட்டுள்ள 71 குடும்பங்களுக்கு, தலா 12 இலட்சம் ரூபாய் செலவில் வீடுகளை அமைத்துக்கொடுப்பதற்கு நடவடிக்கைகைள மேற்கொண்டுள்ளன.
மேற்படித் தோட்டத்தில், கடந்த 2014ஆண்டு மண்சரிவு காரணமாக 71 குடும்பங்கள் பாதிக்கப்பட்டமைக் குறிப்பிடத்தக்கது. இம்மக்களின் நலன்கருதி, புதிய வீடமைப்புத் திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
வீடமைப்புத் திட்டம் தொடர்பாகத் தெளிவுபடுத்தும் கலந்துரையாடல், தம்பேதன்ன தொழிற்சாலையில், வெள்ளிக்கிழமை (1) இடம்பெற்றது.
பெருந்தோட்ட கைத்தொழில் இராஜாங்க அமைச்சரும் இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளருமான வடிவேல் சுரேஸின் தலைமையில் நடைபெற்ற இந்தக் கலந்துரையாடலில், பசறை பிரதேச செயலகத்தின் தவிசாளர், தோட்ட முகாமையாளர் உள்ளிட்ட பல அதிகாரிகள் கலந்துகொண்டன்ர.
மேற்படி மக்களுக்கு, வீடுகளை அமைத்துக் கொடுப்பதற்கு தேவையான காணி இனங்காணப்பட்டு, மண் சரிதவியல் அறிக்கைகளும் பெறப்பட்டுள்ளதென்றும், கூடிய விரைவில் வீடமைப்புத் திட்டம் முன்னெடுக்கப்படுமென்றும் இராஜாங்க அமைச்சர் வடிவேல் சுரேஷ் இதன்போது தெரிவித்துள்ளார்.
14 minute ago
23 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
23 minute ago