2026 ஜனவரி 19, திங்கட்கிழமை

மவுசாகலை வீதித் தடையில் குவியும் சங்கீத உபகரணங்கள்

R.Maheshwary   / 2022 ஜனவரி 11 , மு.ப. 06:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

காமினி பண்டார

சிவனொளிபாதமலை யாத்திரைக்கு செல்வோர்,  மதுபானம், பொலித்தீன், சங்கீத உபகரணங்கள் மற்றும் உக்காத பொருள்களைஎடுத்துச் செல்வதை தவிர்க்குமாறு ஊடகங்கள் வாயிலாக அறிவிப்புகள் விடுக்கப்பட்டுள்ள நிலையில், பலர் இந்த விடயங்களை கவனத்தில் எடுக்காமல் செயற்படுவதாக குற்றஞ்சுமத்தப்பட்டுள்ளது.

இதற்கமைய, சிவனொளிபாதலை யாத்திரைக்குச் செல்பவர்களை சோதனை செய்யும் நடவடிக்கைகள் கினிகத்ஹேன, ஹட்டன், மஸ்கெலியா மற்றும் நல்லத்தண்ணி ஆகிய பகுதிகளில் முன்னெடுக்கப்படுகின்றன.

இவ்வாறு சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்ட போது, சிவனொளிபாதமலைக்கு யாத்திரைச் சென்றவர்கள் கொண்டு சென்ற பல்வேறு வகையான சங்கீத உபகரணங்கள் மஸ்கெலியா- நல்லதண்ணி பொலிஸாரால் கைப்பற்றப்பட்டு மவுசாகலை வீதித் தடை பொலிஸாரின் பொறுப்பின் கீழ் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

இவ்வாறு ஒப்படைக்கப்பட்ட பொருள்கள், யாத்திரை முடிந்து திரும்பிச் செல்லும் போது, அதன் உரிமையாளர்களிடமே ஒப்படைக்கப்படுவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

 

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X