Ilango Bharathy / 2021 டிசெம்பர் 02 , மு.ப. 09:04 - 0 - {{hitsCtrl.values.hits}}
டி.ஷங்கீதன்
கொழும்பில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையை அடுத்து, கடந்த 5 நாள்களாக பணிபகிஷ்கரிப்பில் ஈடுபட்டு வந்த வட்டவளை- மவுண்ட்ஜின் தோட்ட மக்களின் பணிபகிஷ்கரிப்பு நேற்றுடன் (1) நிறைவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
இது தொடர்டபான கலந்துரையாடல் நேற்று முன்தினம் (30) மாலை கொழும்பில் அமைந்துள்ள மக்கள் தோட்ட அபிவிருத்தி சபையின் தலைமை காரியாலயத்தில் நடைபெற்றது.
இக்கலந்துரையாடலில் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மலையக மக்கள் முன்னிணியின் தலைவருமான வேலுசாமி இராதாகிருஸ்ணன் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வேலுகுமார் தோட்ட தொழிற்சங்க தலைவர்கள் மற்றும்
தொழிலாளர்களும் கலந்து கொண்டனர்.
இது தொடர்பாக கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் வேலுசாமி
இராதாகிருஸ்ணன், பல கோரிக்கைகளை முன்வைத்து வேலை நிறுத்த போராட்டத்தில்
ஈடுபட்டு வந்த தொழிலாளர்களை, தான் கடந்த நேரில் சென்று சந்தித்து,கொழும்பில் பேச்சுவார்த்தை ஒன்றை ஏற்பாடு செய்வதாக கூறியிருந்ததாகத் தெரிவித்தார்.
அதற்கு அமைய, கொழும்பில் கலந்துரையாடல் இடம்பெற்றதாகவும் இதன்போது, அடுத்த வாரம் குறித்த தோட்டத்திற்கு மக்கள் தோட்ட அபிவிருத்தி சபையின் தலைவர் தலைமையில் கள விஜயம் ஒன்றை மேற்கொண்டு அங்கிருக்கின்ற பிரச்சினைகளுக்கு தீர்வை பெற்றுத் தருவதாக உறுதியளித்தார் என்றார்.
5 hours ago
5 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
5 hours ago
8 hours ago