R.Maheshwary / 2021 செப்டெம்பர் 01 , பி.ப. 04:49 - 0 - {{hitsCtrl.values.hits}}
இரா.யோகேசன்
வட்டவளை- மவுண்ட்ஜின் தோட்டத்தில் இன்று காலை கொழுந்து பறித்துக்கொண்டிருந்த, தொழிலாளர்களை குளவிக்கொட்டியதால், 10 பேர் வட்டவளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இவ்வாறு அனுமதிக்கப்பட்ட 10 பேரில் மூவர் வெளிநோயாளர் சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைப் பெற்று வீடு திரும்பியுள்ள நிலையில், 7 பேர் தொடர்ச்சியாக தங்கியிருந்து சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
கடந்த சில நாள்களாக குறித்த தோட்டத்தில் தொழிலாளர்கள் குளவிக்கொட்டுக்கு இலக்காகி வரும் நிலையில், தோட்டங்கள் முறையான பராமரிப்பு இன்றி பற்றைக் காடுகளாக மாறியுள்ளதாக தொழிலாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
அரச பெருந்தோட்ட யாக்கத்தால் நிர்வகிக்கப்படும் குறித்த தோட்டத்தின் நிர்வாகம், தோட்டத்தை பராமரிப்பு செய்யும் விடயத்தில் அசமந்த போக்குடன் இருப்பதாகவும் தெரிவிக்கின்றனர்.
30 minute ago
2 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
30 minute ago
2 hours ago
4 hours ago