Editorial / 2019 ஏப்ரல் 26 , பி.ப. 02:04 - 0 - {{hitsCtrl.values.hits}}
செ.தி.பெருமாள்
மஸ்கெலியா நகருக்கு உட்பட்ட பகுதிகளில், இன்று அதிகாலை (26) முதல் மேற்கொள்ளப்பட்டு வரும் சோதனைகளில், சந்தேகத்தின் பேரில் மூவரையும் போதைப் பொருள்கள் வைத்திருந்தக் குற்றச்சாட்டில் ஒருவரையும் பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
மஸ்கெலிய நகரில் பஸ் தரிப்பிடம், ஆலயம், பள்ளிவாசல், கத்தோலிக்க தேவாலயம், பௌத்த விகாரை, சமனலிய வித்தியாலயம், சென்ஜோசப் தமிழ் வித்தியாலயம், சென்ஜோசப் கல்லூரி, முஸ்லிம் வித்தியாலயம் உள்ளிட்ட பல இடங்களில் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
மஸ்கெலியா பொலிஸார், அதிரடி படையினர் மற்றும் லக்சபான இராணுவ முகாமைச் சேர்ந்த இராணுவத்தினர் அடங்களாக 68 பேர், இச்சோதனையை மேற்கொண்டமை குறிப்பிடத்தக்கது.
மேலும் மவுசாகலை நீர்த்தேக்கப்பகுதியில், வீதித்தடைகளை ஏற்படுத்தி நகரில் இருந்து செல்லும் வாகனங்களையும் நகருக்கு வரும் வாகனங்களையும் பொலிஸார் சோதனைக்கு உட்படுத்தி வருகின்றனர்.
55 minute ago
1 hours ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
55 minute ago
1 hours ago
2 hours ago
3 hours ago