2025 மே 19, திங்கட்கிழமை

மஸ்கெலியா – நல்லத்தண்ணீர் பாதை தொடர்ந்து மூடப்பட்டுள்ளது

R.Maheshwary   / 2022 ஓகஸ்ட் 15 , மு.ப. 09:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

 எம்.பிரபா

மஸ்கெலிய பிரதேச சபைக்குட்பட்ட மஸ்கெலியா – நல்லத்தண்ணீர் பாதை கடந்த 13 நாட்களாக தொடர்ந்து மூடப்பட்டுள்ளது.

இந்த மாதம் முதலாம் திகதி பெய்த மழை காரணமாக மஸ்கெலிய – நல்லத்தண்ணீர் பாதையில் மோகினி எல்லைப்பகுதியில் ஏற்பட்ட மண்சரிவுக்காரணமாக இந்த பாதை முழுமையாக மண்ணால் நிரம்பியுள்ளது.

இதன் காரணமாக இந்த பாதையூடான போக்குவரத்து தடைப்பட்டுள்ளதுடன் இந்த மண்மேட்டின் ஊடாக நடந்து பயணிப்பதும் மிகவும் ஆபத்தானதாக காணப்படுகின்றது.

இதனால் இந்த பகுதியில் வாழும் சுமார் 15000ற்கும் மேற்பட்ட மக்கள் பெரும் சவாலை எதிர்நோக்கியுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X