Editorial / 2026 மார்ச் 16 , பி.ப. 01:47 - 0 - {{hitsCtrl.values.hits}}

செ.தி.பெருமாள்
மஸ்கெலியா பொது விளையாட்டு மைதானத்தை நவீன வசதிகளுடன் அபிவிருத்தி செய்யும் பணிகள் இன்று (16) காலை 10:30 மணியளவில் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டன.
மஸ்கெலியா பிரதேச சபையின் தவிசாளர் கந்தையா இராஜ்குமார் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், கனேடிய உள்ளூராட்சி மன்றங்களின் சம்மேளனம் (FCM) வழங்கிய 1 கோடியே 40 இலட்சம் (14 மில்லியன்) ரூபாய் நிதியுதவியுடன் இப்பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளன.
இந்நிகழ்வில் கனேடிய உள்ளூராட்சி மன்றத் சம்மேளனத்தின் சிரேஷ்ட திட்ட முகாமையாளர் பி. பிரதீப், திட்ட ஒருங்கிணைப்பாளர் சாந்தனி ராமநாயக்க, மதிப்பீட்டு உத்தியோகத்தர் கோவிந்தராஜ் டில்ஷான் மற்றும் நிகழ்ச்சி திட்ட அமைப்பாளர் லசிந்து பண்டார ஆகியோர் கலந்துகொண்டனர்.
மேலும், மஸ்கெலியா பிரதேச சபையின் உப தவிசாளர் பரமசிவம் ராஜ் அசோக், செயலாளர் எஸ். ராஜவீரன், சபை உறுப்பினர்கள், மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஏ. புஷ்பகுமார, பொது சுகாதார உத்தியோகத்தர் எம்.எச். ஈர்ஷாட், வர்த்தகர்கள் எனப் பலரும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
அபிவிருத்தித் திட்டத்தின் சிறப்பம்சங்கள்: அடுத்த மூன்று மாத காலத்திற்குள் நிறைவு செய்யப்படவுள்ள இந்தத் திட்டத்தின் கீழ் பின்வரும் வசதிகள் ஏற்படுத்தப்படவுள்ளன:
5 minute ago
1 hours ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
1 hours ago
1 hours ago
1 hours ago