2025 நவம்பர் 06, வியாழக்கிழமை

மஸ்கெலியா விபத்தில்: இருவர் பலி

Editorial   / 2024 ஓகஸ்ட் 10 , பி.ப. 05:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

செ.தி. பெருமாள்

மஸ்கெலியா, நகரில் இருந்து மரே தோட்ட வலதள பிரிவுக்கு சென்ற முச்சக்கர வண்டி ஒன்று அதி வேகம் காரணமாக கட்டுப்பாட்டை இழந்த நிலையில் முன்னால் வந்த வாகனத்தில் மோதுண்டு முச்சக்கர வண்டி தடம் புரண்டு இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.

மேலும் இரண்டு பேர் மஸ்கெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக டிக்கோயா கிளங்கன் ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு உள்ளார்கள்.

இவ் விபத்து குறித்து மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி விசாரணை நடத்தி வருகின்றனர்.

இறந்தவர்களின் சடலம் சம்பவம் நடந்த மஸ்கெலியா நல்லதண்ணி பிரதான வீதியில் புரவுன்லோ தோட்டத்தை சேர்ந்த பகுதியில் சாலையில் உள்ளது. 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X