R.Maheshwary / 2021 செப்டெம்பர் 15 , பி.ப. 03:07 - 0 - {{hitsCtrl.values.hits}}
செ.தி பெருமாள்
மஸ்கெலியா பிரதேசத்தில் மின்தகனசாலை ஒன்றை அமைப்பது தொடரபான பிரேரணையொன்று, மஸ்கெலியா பிரதேசசபையில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.
மஸ்கெலியா பிரதேசத்தில் கொரோனாவால் உயிரிழப்பவர்களின் சடலங்கள், நோர்வுட் தகனசாலையிலேயே தகனம் செய்யப்பட்டு வருகின்றது.
இதனால் மஸ்கெலியாவிலிருந்து நோர்வூட்டுக்கு சடலங்களை கொண்டு செல்வதில் சிக்கல் ஏற்படுவதை கவனத்தில்கொண்டு, இத்தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இதற்கமைய, இந்த மாதம் 13ஆம் திகதி இடம்பெற்ற சபை அமர்வின் போது, தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதேச சபை உறுப்பினர் ராஜ் அசோகால் இது தொடர்பான பிரேரணை முன்வைக்கப்பட்டது.
இப்பிரேரணைக்கு எதிர்கட்சி உறுப்பினர்கள் உள்ளிட்டவர்கள் ஆதரவு தெரிவித்து, ஏகமானதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.
.
பிரேரணை நிறைவேற்றப்பட்டதை அடுத்து, இது தொடர்பில் சுகாதார அமைச்சு, மாவட்ட செயலகம் மற்றும் உரிய தரப்பினர்களுக்கு கடிதம் அனுப்ப உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .