Sudharshini / 2016 மே 11 , மு.ப. 09:54 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஆ.ரமேஸ்
நுவரெலியா மாவட்டத்தில் காணப்படும் 490 கிராமசேவகர் பிரிவுகளிலுமுள்ள பொதுமக்களுக்கான பொதுச் சேவைகளை முன்னெக்கும்; நோக்கில், மஹிந்த மக்கள் சேவை ஸ்தாபனமொன்று, தலவாக்கலை நகரில் இன்று புதன்கிழமை (11) அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.
தலவாக்கலையின் முன்னாள் நகரசபை தலைவர் அசோக்க சேபால தலைமையில், புதிய தலவாக்கலை கூட்டுறவுச் சங்க பிரதான காரியாலயத்தில் இத்தாபனம் ஆரம்பிக்கப்பட்டது.
இந்நிகழ்வில்; பிரதம அதிதியாக, கூட்டுறவு சங்கத் தலைவர் பசில் சேனாதீர மற்றும் பிரதேச மக்கள் கலந்துக்கொண்டனர்.யுnஉhழச இத்தாபனத்தின் தலைவர், செயலாளர்கள் உள்ளிட்ட குழுவினர் இதுவரை நியமிக்கப்படவில்லை எனவும் இதன் அங்கத்தவர்கள் ஒன்று கூடி ஆராய்ந்த பின்னரே தலைவர், செயலாளர் நியமிக்கப்படுவர் எனவும் தெரியவருகிறது.

அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .