2026 மே 14, வியாழக்கிழமை

dd

மஹாதோவா தோட்டம் கதிர்வேலாயுத சுவாமி கோவில் கும்பாபிஷேகம்

Editorial   / 2019 செப்டெம்பர் 10 , பி.ப. 05:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

மடுல்சீமை, மஹாதோவ தோட்டம், கீழ்ப்பிரிவு ஸ்ரீ கதிர்வேலாயுத சுவாமி கோவில்  மகா கும்பாபிஷேக பெருவிழா நாளை (11) தொடக்கம் தொடர்ந்து மூன்று நாள்களுக்கு நடைபெறவுள்ளது.

இதன்படி, நாளை காலை விநாயகர் வழிபாடு, பிரதிஸ்டா சங்கல்பம் உள்ளிட்ட விசேட பூஜைகளும் மாலை 5 மணிக்கு விநாயகர் வழிபாடு, கிராம சாந்தி, திருவிளக்கு பூஜை என்பன நடைபெறவுள்ளன.

12ஆம் திகதி வியாழக்கிழமை காலை, விசேட பூஜைகளைத் தொடர்ந்து எண்ணெய்க்காப்பு சாத்துதல் இடம்பெற்று, 13ஆம் திகதி வெள்ளிக்கிழமை அதிகாலை விசேட பூஜைகளைத் தொடர்ந்து, மகா கும்பாபிஷேகம், திருக்கும்ப அபிஷேகம், மகேஸ்வர பூஜை என்பன நடைபெறவுள்ளது.

மகா கும்பாபிஷேக நிகழ்வுகள், யாழ்ப்பாணம் நல்லூர் ஆலய பிரதம சிவாச்சாரியார் கும்பாபிஷேக பிரதிஷ்டா பிரம்ம ஸ்ரீசிவம் ஸ்ரீ சுதர்ஷணக் குருக்கள் தலைமையில் நடைபெறவுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .