2025 ஜூலை 02, புதன்கிழமை

மஹியங்கனை மாணவி மீது கூட்டு வன்புணர்வு : ஐவர் சிக்கினர்

எம். செல்வராஜா   / 2017 நவம்பர் 14 , பி.ப. 04:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிரத்தியேக வகுப்புக்குச் சென்று வீடு திரும்பிக் கொண்டிருந்த மாணவியொருவரை, கூட்டு வன்புணர்வுக்கு உட்படுத்தியதாகக் கூறப்படும் சம்பவத்துடன் தொடர்புடைய ஐந்து இளைஞர்களை, பொலிஸார் கைது செய்துள்ளனர்.

 

மஹியங்கனையை அண்மித்த கிராமப் பகுதியில், நேற்று (13) மாலை இடம்பெற்றுள்ள இச்சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மாணவி, மஹியங்கனை அரசினர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டிருக்கும் ஐந்து இளைஞர்களும் 17, 19, 22, 24 மற்றும் 25 வயதுகளை உடையவர்கள் என்பது பொலிஸ் விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.

16 வயதுடைய மேற்படி மாணவி, பிரிதொரு இளைஞருடன் வீடு திரும்பிக்கொண்டிருந்த போது எதிர்ப்பட்ட சந்தேகநபர்களான மேற்படி ஐந்து மாணவர்களும், குறித்த இளைஞனைத் தாக்கி, அவரை மயக்கமுறச் செய்ததன் பின்னரே, மாணவியைக் கடத்திச்சென்று, கூட்டு வன்புணர்வுக்கு உட்படுத்தியுள்ளனர்.

மயக்கம் தெளிந்த இளைஞன், சம்பவம் தொடர்பில், மஹியங்கனை பொலிஸாருக்கு உடனடியாக அறிவித்துள்ளார். பின்னர், சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிஸார், சந்தேகநபர்களான ஐந்து இளைஞர்களையும் கைது செய்ததுடன், பாதிக்கப்பட்ட மாணவியை, மஹியங்கனை அரசினர் வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர். இருப்பினும், மாணவியின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக, வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை, மஹியங்கனைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்ற அதேவேளை, கைது செய்யப்பட்ட ஐவரையும் மஹியங்கனை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .