Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை
Kogilavani / 2017 செப்டெம்பர் 07 , பி.ப. 12:18 - 0 - {{hitsCtrl.values.hits}}
பாலித ஆரியவன்ச
பதுளை மஹா வித்தியாலத்துக்கு அருகில் விழுந்துக்கிடந்த பணப்பையை எடுத்து, பொலிஸில் ஒப்படைத்த மாணவனை, பதுளை பொலிஸார் பாராட்டியுள்ளனர்.
மேற்படி வித்தியாலயத்துக்கு அருகில், 16,300 ரூபாய் பணம், வங்கி கடனட்டை, வாகன ஓட்டுநர் உரிமம் மற்றும் தேசிய அடையாள அட்டையுடன் பண்பையொன்று கீழே விழுந்துக் கிடந்துள்ளது. இதனை மாணவரொருவர் கண்டெடுத்து பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளார்.
மேற்படி வித்தியாலயத்தில் கல்வி பயின்று வரும் உயர்தர பிரிவை சேர்ந்த பீ.அனுராத என்ற மாணவரே, பணப்பையை பொலிஸில் ஒப்படைத்துள்ளார்.
இப்பணப்பையானது, பதுளை மாவட்டத்தை சேர்ந்த சமுர்த்தி உத்தியோகத்தரான கே.கே.வசந்த என்பவரதென்று தெரியவந்துள்ளது.
இதனையடுத்து, பொலிஸார் குறித்த நபரை வரவழைத்து பணப்பையை ஒப்படைத்துள்ளதுடன், மாணவனையும் பாராட்டியுள்ளனர். பதுளை பொலிஸ் நிலைய பிரதான பொலிஸ் அதிகாரி விபுல் தென்னகோன் பாடசாலையின் அதிபர் புபுத ஜயசிங்க ஆகியோர் முன்னிலையில் மாணவன், பணப்பைய உரியவரிடம் ஒப்படைப்பதை படத்தில் காணலாம்
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago