Freelancer / 2023 மார்ச் 14 , மு.ப. 10:33 - 0 - {{hitsCtrl.values.hits}}
பதுளை - ஸ்பிரிங்வெளி தோட்ட, நாவலவத்தையில் (4ஆம் பிரிவு) வசித்து வந்த விவேகானந்தன் ரகுமான் (வயது -16) என்ற பாடசாலை மாணவன் காணாமல் போயுள்ளார்.
குறித்த மாணவனை கடந்த பெப்ரவரி மாதம் 15 ஆம் திகதியிலிருந்து காணவில்லை என பெற்றோர் பதுளை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.
பெத்தேகம பகுதியில் உள்ள சகோதர மொழிப் பாடசாலையில் தரம் 11இல் கல்வி கற்று வந்த குறித்த மாணவன் சம்பவ தினமன்று பெத்தேகம புரான மகா விகாரையில் நடைபெற்ற மேலதிக வகுப்பிற்கு செல்வதாக கூறிச் சென்றுள்ளார்.
அவர் இறுதியாக சிவப்பு நிற டீ- சேர்ட்டும், நீல நிற, நீள காற்சட்டையும் அணிந்திருந்ததுடன், ஊதா நிறப் புத்தகப் பையை கொண்டு சென்றுள்ளார்.
இவர் குறித்த தகவல் அறிந்தோர் 076 0178821, 077 2405245 என்ற தொலைபேசி இலக்கங்களுக்கு அல்லது அருகில் உள்ள பொலிஸ் நிலையத்திற்கு தகவல் வழங்குமாறு தந்தை விவேகானந்தன் வேண்டுகோள் விடுத்துள்ளார். R

48 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
48 minute ago
1 hours ago
1 hours ago