2025 ஓகஸ்ட் 11, திங்கட்கிழமை

மாணவர் பாராளுமன்றுக்கு வாக்களிப்பு நடைபெற்றது

Freelancer   / 2023 மார்ச் 09 , மு.ப. 03:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆ.ரமேஸ்.

வலப்பனை கல்வி வலயத்துக்கு உட்பட்ட உடப்புஸ்ஸலாவ மமா/வ/எமஸ்ட் தமிழ் வித்தியாலயத்தில் அதிபர் ப.முகுந் கமலவண்ணன்  தலைமையில் மாணவர் பாராளுமன்றத்துக்கான வாக்களிப்பு (07.03.2023) அன்று நடைபெற்றது.

மாணவர்களின்  தலைமைத்துவ பண்பினை வலுப்படுத்தும் நோக்கில் கல்வி அமைச்சின் சுற்று நிரூபத்திற்கு அமைய இந்த தேர்தல் நடத்தப்பட்டது.

இந்த நிகழ்வில் வலப்பனை வலயக் கல்வி பணிமனையின்   கோட்ட கல்வி பணிப்பாளர்   யோகராஜ், ஆசிரியர் ஆலோசகர்கள் திரு.இளங்கோ, திரு.துரையரசன் ஆகியோர் கலந்து கொண்டு வாக்கெடுப்பை நடத்தினர்.

மேலும் வாக்கெடுப்பின் முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளதுடன் மாணவர் பாராளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்பட்டுள்ள பத்து மாணவர்கள் எதிர்வரும் (30.03.2023) வியாழக்கிழமை பதவியேற்க உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X