2025 டிசெம்பர் 15, திங்கட்கிழமை

மாணவர்களிடையே மோதல்; நால்வர் வைத்தியசாலையில்

R.Maheshwary   / 2022 செப்டெம்பர் 15 , பி.ப. 01:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

சேஹ்ன் செனவிரத்ன

பேராதனை பல்கலைக்கழகத்தின் கல்வி கற்கும் மாணவர் குழுக்களிடையே இடம்பெற்ற மோதலில் நால்வர் பேராதனை வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டுள்ளனர்.

இதில் இரண்டு மாணவிகளும் உள்ளடங்குவதாக பேராதனை பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த பல்கலைக்கழகத்தில் பகிடிவதைக்கு ஆதரவான மற்றும் எதிரான இரு மாணவர் குழுக்களிடையே இந்த மோதல் இடம்பெற்றுள்ளது.

சட்டபீடத்தில் இரண்டாம் மூன்றாம் வருடங்களில் கல்வி பயிலும் மாணவர்களிடையே இந்த மோதல் ஏற்பட்டுள்ளது.

நேற்று (14) மாலை பல்கலைக்கழகத்தின் சிற்றுண்டிச்சாலைக்கு அருகில் இந்த மோதல் சம்பவம் இடம்பெற்றுள்ளதுடன், 30 பேர் கொண்ட மாணவர்கள் குறித்த நான்கு மாணவர்களையும் தாக்குவதற்கு வருகைத் தந்துள்ளதாகவும் இவர்கள் பகிடிவதைக்கு ஆதரவான மாணவர்கள் என்றும் தெரிவிக்கபட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பான விசாரணைகளை பேராதைனை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .