2025 ஜூலை 23, புதன்கிழமை

மாணவர்களின் கல்விக்கு ஆபத்து காத்துருக்கிறது?

Yuganthini   / 2017 ஓகஸ்ட் 01 , பி.ப. 05:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செ.தி. பெருமாள்

 

மத்திய மாகாணத்துக்கு உட்பட்ட ஆசிரியர்கள், நிலுவையில் உள்ள 800 மில்லியன் ரூபாய் சம்பள பணத்தை பெற்றுத்துருமாறு வலியுறுத்தி, நாளை (02)  மத்திய மாகாண கல்வி திணைக்களத்தின்  முன்பாக, ஆர்ப்பாட்டம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளதாக, இலங்கை ஆசிரிய சங்கம்  தெரிவித்துள்ளது.

 

மேலும், நாளை முன்னெடுக்கப்படவுள்ள ஆர்ப்பாட்டத்தின் பின்னராவது, வழங்க வேண்டிய நிலுவை பணத்தை வழங்காவிடின், 1,500 பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகள் அனைத்தும் கைவிடப்படும்” எனவும் தெரிவித்துள்ளது.

இது குறித்து, கருத்துத் தெரிவித்த இலங்கை தேசிய ஆசிரிய சங்க ​செயலாளர் கமகேதர திசாநாயக்க கூறியதாவது,

“கடந்த 10 ஆண்டுகளாக, 30 ஆயிரம் ஆசிரியர்களுக்கு 80 இலட்சம் ரூபாய், நிலுவையில் உள்ளது. கம்பளை, கட்டுகஸ்தோட்டை, தெவிநுவர, மாத்தளை, நுவரெலியா, கொத்மலை, ஹங்குரன்கெத மற்றும் வலப்பனை ஆகிய கல்வி வலயங்களுக்கு உட்பட்ட பாடசாலையில்  பணிபுரியும் ஆசிரியர்களுக்கே மேற்படி  கொடுப்பனவு வழங்கப்படாது நிலுவையில் உள்ளது.

“இந்த நிலுவை சம்பளத் தொகையை, விரைவில் தந்து உதவுமாறு, கடந்த 14ஆம் திகதி மாகாண  கல்வி அமைச்சின் செயலாளருக்கு அனுப்பிவைக்கப்பட்ட கடிதத்துக்கு இன்று வரை பதில் கிடைக்கவில்லை.

“நாளை முன்னெடுக்கப்படவுள்ள ஆர்ப்பாட்டத்தின் பின்னராவது, வழங்க வேண்டிய நிலுவை பணத்தை வழங்காவிடின், 1,500 பாடசாலைகளின் கல்வி நடவடிக்கை கைவிட எமது சங்கம் முடிவு செய்துள்ளது” என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .