எம். செல்வராஜா / 2018 மார்ச் 20 , பி.ப. 03:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
மாணவிகள் மூவருக்கு, தொடர்ச்சியாக துஷ்பிரயோகம் செய்து வந்த ஆசிரியரை, தலா ஒரு இலட்சம் ரூபாய் பெறுமதியான இரண்டு சரீரப்பிணைகளில் செல்வதற்கு உத்தரவிட்ட, பதுறை நீதவான் நீதிமன்ற நீதிபதி, இது தொடர்புடைய வழக்கை, எதிர்வரும் 24ஆம் திகதி வரை ஒத்திவைத்தார்.
பதுளையிலுள்ள பாடசாலையொன்றில் ஆசிரியராகக் கடமையாற்றிவருபவக்கே, இந்தச் சரீரப்பிணை வழங்கப்பட்டுள்ளது. இவர், தரம் 6 இல் கல்வி கற்று வரும் மூன்று மாணவிகளை, துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தினார் என்று, பதுளை பொலிஸாரிடம் ஏற்கெனவே முறையிடப்பட்டிருந்தது. பாதிக்கப்பட்ட மாணவிகள், பாடசாலையொன்றின் அறையில் வைத்து, இச்சம்பவம் இடம்பெற்றதாக, தத்தமது பெற்றோருக்கு அறிவித்ததையடுத்தே, இந்த முறைப்பாடு பதிவு செய்யப்பட்டிருந்தது.
இந்நிலையில், குறித்த ஆசிரியர், பாடசாலையில் வைத்தே, பொலிஸாரால் கைது செய்யப்பட்டார். இந்நிலையில், விசாரணைகளுக்குப் பின்னர், குறித்த ஆசிரியர், இன்று (20) பதுளை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். இதன்போது, ஆசிரியருக்கு எச்சரிக்கை விடுத்த நீதவான், நிபந்தனைகளுடனான சரீரப்பிணையையும் வழங்கினார்.
குறித்த மாணவிகள், வைத்திய பரிசோதனைக்காக, பதுளை அரச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
8 hours ago
9 hours ago
9 hours ago
20 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
9 hours ago
9 hours ago
20 Dec 2025