Janu / 2025 செப்டெம்பர் 02 , பி.ப. 01:37 - 0 - {{hitsCtrl.values.hits}}
மொனராகலை பாடசாலையொன்றில் கல்வி கற்கும் மாணவி ஒருவர் திங்கட்கிழமை (01) அன்று தனது பிரத்தியேக வகுப்புக்களை முடித்துவிட்டு வீடு திரும்பும் போது, இனந்தெரியாத ஒருவர் அவரது கழுத்தில் இருந்து தங்க சங்கிலியை அபகரித்துச் சென்றுள்ளார்.
19 வயதுடைய குறித்த மாணவி தனது பிரத்தியேக வகுப்பை முடித்துவிட்டு நக்கல்ல தோட்ட பகுதியில் உள்ள தனது வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தபோது, ஒரு நபர் அவரது பின்னால் வந்து அவர் அணிந்திருந்த தங்கச் சங்கிலியை பறித்துக்கொண்டு தப்பியோடியதாக பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகள் மற்றும் சந்தேக நபரைக் கண்டுபிடிப்பதற்கான நடவடிக்கைகள் பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
சுமனசிறி குணதிலக்க
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .